“ஸ்டெர்லைட் விவகாரம்” – தொழிலாளர்களின் வாழ்வாதாரம்..?

18 August 2020, 2:16 pm
Quick Share

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்யும் சூழல் உறுவாதியுள்ளது என, ஸ்டெர்லைட் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு, 13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டெர்லைட் நிறுவன நிர்வாகிகள் செய்தியாளை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் வளங்கி இருக்கும் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் இதையே நம்பி இருந்த ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது என தெரிவித்த அவர்கள், இதனால், தூத்துக்குடியின் பொருளாதாரத்தில் 600 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது பிற முதலீடுகளிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது சுயசார்பு இந்தியாவிற்கு எதிரானது எனவும் கூறியுள்ளனர்.

Views: - 42

0

0