காற்றாலைகளுக்கு பயனளிக்காத புயல் காற்று…!!

27 November 2020, 8:45 am
wind mill - updatenews360
Quick Share

சென்னை: வட மாவட்டங்களில் வீசிய புயல் காற்று காற்றாலைகளுக்கு பயனளிக்காமல் வீணானதாக எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக புயல் கரையை கடக்கும் போது வீசும் சூறாவளி காற்றால் காற்றாலை மின்சார நிலையங்களில் மின்சார உற்பத்தி ஏற்படுவது வழக்கம். சராசரியாக இதுபோன்ற புயல் காலங்களில் 1,500 முதல் 2,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்து வந்தது.

சமீபத்தில், நிவர் புயல் வட தமிழகத்தில் கரையை கடந்தது. காற்றாலைகள் அனைத்தும் தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் இருப்பதால், வட மாவட்டங்களில் வீசிய புயல் காற்று காற்றாலைகளுக்கு பயனளிக்காமல் வீணாகி போனது.

இதனால் மின்சார வாரியத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மாறாக சேதத்தை தான் ஏற்படுத்தி சென்று உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Views: - 19

0

0