ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் : கருணாஸ் எச்சரிக்கை!!

1 November 2020, 4:11 pm
Karunas - Updatenews360
Quick Share

கோவை : முத்துராமலிங்க தேவை இழிவுபடுத்திய ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திருநீரை பூச மறுத்தது கண்டனத்துக்கு உரியது. வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

ஒன்று நார்த்தீகராக அல்லது ஆர்த்தீகராக இருக்க வேண்டும். முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்திய ஸ்டாலின், வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் முக்குலத்தோர் சார்பில் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்தார்.

சசிகலாவிற்கு அரணாக இருப்போம். அவர் வெளியே வந்தால் சந்திப்பேன் என்று கூறிய கருணாஸ், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர், வன்னியர் சமூகத்திற்கு உள்ளது போல தங்கள் சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை எந்த கட்சி ஏற்கிறதோ அந்த கட்சியிடம் அரசியல் கூட்டணி அமையலாம் என்றார்.

Views: - 20

0

0