அரசு உதவி பெறும் பள்ளியில் மூடிக் கிடந்த கிணற்றில் மாணவர் சடலம்.. சந்தேகம் கிளப்பும் அதிமுக!
Author: Udayachandran RadhaKrishnan5 August 2025, 10:34 am
திருப்பத்தூர் மாவட்டம் அரசு நிதி உதவி பெறும் தோமனிக் சேவியோ மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பயின்ற கொத்தூர் பகுதியை சேர்ந்த பதினோறாம் வகுப்பு மாணவன் முகலின் என்பவர் பள்ளியில் உள்ள கம்பியால் மூடி வைக்கப்பட்டு இருந்த கிணற்றில் மூன்று நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து மாணவனின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
இதனால் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக, பாஜக கட்சியினரும் தொடர்ந்து மாணவனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனையிடையில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி. டி. குமார் மாணவனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டி இரண்டு நாட்களாக பல்வேறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு இதுவரை பள்ளியின் நிர்வாகத்தின் மீதோ, மாணவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீதோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் எனவும்

மாணவனின் உயிரிழப்புக்கு சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் எனவும்
உடனடியாக பள்ளியின் நிர்வாகத்தின் மீதும் பள்ளியின் தாளாளரை கைது செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
