வாளையாறு அணையில் நீரில் மூழ்கி பலியான மாணவர்கள் : 12 மணி நேரத்திற்கு பின் அதிநவீன கருவிகள் மூலம் உடல்கள் மீட்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 September 2021, 5:20 pm
கோவை : வாளையாறு அணையில் குளிக்க சென்ற மாணவர்கள் நீருக்குள் மூழ்கிய நிலையில் உடலை தேடுவதில் சிக்கல் இருந்ததால் கொச்சின் கடற்படையினர் கேமராக்களை நீருக்குள் அனுப்பி மீட்டனர்.
கோவை வாளையாறு அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் ஆண்டோ, சஞ்சய், பூர்ண ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர் நேற்று மாலை நீரில் மூழ்கினர்.
அவர்களை தேடும் பணியில் வாளையாறு போலீசார் மற்றும் தீணைப்பு மீட்பு படையினர் ஈடுபட்டனர். 12 மணி நேரத்திற்கு பின் பூர்ண ஈஸ்வரன் உடல் மீடகப்பட்டது.
மேலும் 2 பேரை மீட்பதில் சிக்கல் இருந்த நிலையில், கொச்சின் கடற் படையினர் கேமராக்களை நீருக்குள் அனுப்பி உடல்களை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆண்டோ, சஞ்சய், உடல்கள் மீட்கப்பட்டது.
Views: - 255
0
0