“மாணவர்களே தற்கொலை எண்ணத்தை கையில் எடுக்காதீர்கள்” : விஜயகாந்த் வேண்டுகோள்..!

12 September 2020, 5:27 pm
Quick Share

நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் இன்று மதுரை மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்துகொண்டார். அவரின் இழப்பு குறித்தும், நீட் தேர்வு விவகாரம் குறித்தும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாணவர்களின் தற்கொலை முடிவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், தயவு செய்து இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இந்த சூழலில், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் ஜோதி துர்கா தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்.

தற்கொலை என்பது தீர்வல்ல; வருங்காலம் என்பது இளைஞர்களின் கையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “வாழ்க்கையை துணிவோடு எதிர்கொண்டு முன்னோக்கி சென்றால்தான் வெற்றி, தோல்விகளை சந்திக்க முடியும். ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் திறன் படைத்தவர்கள் மாணவ சமுதாயத்தினர்” என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Views: - 0

0

0