அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு… மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 11:59 am

திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையத் முதர்தசா மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த காலை உணவுத் திட்ட தயாரிக்கும் கூட்டத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் சரியாக இருக்கிறதா, மாணவர்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதிகாரியுடன் கேட்டு அறிந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தொடர்ந்து மாணவ, மாணவியர்களிடம் உரையடினார்.

இந்த நிகழ்வின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவருக்கும் காலை வணக்கம். நான் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மற்றும் எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் மாணவர்களுக்காக , தமிழ்நாடு முதல்வர் அறிவித்த காலை உணவு திட்டத்தை தான் ஆய்வு செய்வேன்.

மேலும் எனக்கு காலை உணவு என்பது பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். என்ன தான் வீட்டில் , வெளியில் சாப்பிட்டாலும், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது தான் எனக்கு மகிழ்ச்சி.

மேலும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் போது அவர்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை, கல்வி முறை பற்றி கேட்டு அறிவேன். குறிப்பாக பள்ளிகளில் காலை உணவு சரியான நேரத்தில் வழங்கபடுகிறதா?

ஆசிரியர்கள் சரியான முறையில் கல்வி கற்று தருகிறார்களா என ஆய்வு செய்த பிறகு தான் எனது பணியை தொடங்குவேன் என்றார்.

இந்நிலையில் திருச்சி அரசு சையது முதுர்சா பள்ளியில் ஆய்வு செய்தேன் எனக்கு மகிழ்ச்சி அளிகிறது. மேலும் பள்ளிகல்வி துறைக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

ஆகையால் மாணவர்கள் தங்களின் கவனத்தை சிதரவிடாமல் , கல்வியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தாயாக , தந்தையாகவும் முதல்வர், இந்த அரசு உறுதியாக இருந்து செய்லபடும்.

தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் , கல்வியை மட்டும் கற்க்கவேண்டும்.

வருங்காலத்தில் நீங்கள் ஒரு ஆசிரியர், தொழிலதிபர் ஆக வேண்டும். குறிப்பாக இந்தியாவே உங்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர வேண்டும் என்று தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!