#வீழ்வேனென்று நினைத்தாயோ : மகாகவி பாரதியாருக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மரியாதை..!

11 September 2020, 11:04 am
sp velumani - updatenews360
Quick Share

சென்னை : விடுதலை போராட்ட தியாகி மகாகவி பாரதியாரின் நினைவு தினைவு தினத்தையொட்டி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மரியாதை செலுத்தியுள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகியும், சமூக சீர்திருத்தவாதியுமான மகாகவி சுப்ரமணிய பாரதி, தன்னுடைய தமிழ் புலமையினால், பாடல்கள் மூலமே இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட வேட்கையை தூண்டினார். பெண் விடுதலை, சாதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இப்படி, பல்வேறு புகழ்களை கொண்ட பாரதியாருக்கு, இன்று 99வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவரின் நினைவுகளை கூறி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தனது கனல் பறக்கும் வரிகளால் சுதந்திர வேட்கையை தமிழகம் முழுதும் தூண்டியவர்;ஆங்கிலேயர்களின் தடைகளை ஒவ்வொரு முறையும் தகர்த்தெறிந்து நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என நிமிர்ந்தெழுந்து கர்ஜித்தவர்;மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தில் அவரது நாட்டுப்பற்றை எண்ணி பெருமை கொள்வோம்!,” எனக் குறிப்பிட்டு, தனது மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.

Views: - 0

0

0