தமிழகத்தில் இப்படி ஒரு அரசா? கேவலமா இருக்கு : பாஜகதாங்க ஜெயிக்கும்.. எல்.முருகன் உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 1:41 pm

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நாட்டில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 க்கு மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமையாக தாக்கியுள்ளனர்.

அந்த சம்பவத்திற்கு தமிழக காவல்துறையினர் இரண்டு நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குற்றவாளிகளை பாதுகாப்பது தமிழக காவல்துறைக்கு அழகல்ல. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.

மேலும் படிக்க: செல்போனுக்கு சம்மன்.. TTF வாசனுக்கு வந்த சோதனை : நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக செயல்படுகிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது 2014 ஆம் ஆண்டு பத்தாவது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.

2027க்குள் மூன்றாவது இடத்தை அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி நிச்சயம் நாம் அதை அடைவோம் என்று கூறினார். தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!