பாமக ஜிகே மணிக்கு திடீர் நெஞ்சுவலி.. இரவோடு இரவாக சென்னை அப்பல்லோவில் அனுமதி!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2025, 11:54 am
நேற்று இரவு தருமபுரியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
நெஞ்சு வலி மற்றும் முதுகுத் தண்டு வலி காரணமாக அவர் அவசரமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னையின் முன்னணி மருத்துவமனையான வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே.மணி அவர்களுக்கு, மருத்துவர்கள் தீவிர மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதுவரை மருத்துவமனை தரப்பில் அவரது உடல்நிலை குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
தமிழக அரசியலில் தனித்துவமான பங்காற்றி வரும் ஜி.கே.மணி அவர்களின் உடல்நலம் விரைவில் தேற வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
