சாலையில் சென்ற முதியவருக்கு திடீர் மயக்கம் : உறைய வைத்த காட்சி!! (வீடியோ)
20 November 2020, 11:21 amQuick Share
ஈரோடு : புஞ்சை புளியம்பட்டி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மயங்கி விழும் போது சரக்கு ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த ரங்கன் என்ற முதியவர் நவம்பர் 4-ஆம் தேதி சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி நால்ரோடு பெட்ரோல் பங்க் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சாலையில் விழும் போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது.
Views: - 0
0
0