சென்னையில் திடீர் நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி..

Author: Babu Lakshmanan
24 August 2021, 3:48 pm
EarthQuake_UpdateNews360
Quick Share

சென்னை : சென்னையில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

வங்கக்கடலில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர் கிழக்கு திசையில் வங்கக் கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அடையாறு, திருவான்மியூர், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

Views: - 235

0

0