கோவை காந்திபுரத்தில் பிரபல வணிக நிறுவனத்தில் திடீர் தீ விபத்து : அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2023, 1:33 pm

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள வசந்த் அண்ட் கோ-நிறுவனத்தில் மின் கசிவால், ஏசியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் வசந்த் அண்ட் கோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் கட்டிடத்தின் மாடியில் மின் கசிவால் திடீரென ஏசியில் தீப்பற்ற தொடங்கி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த இரண்டு தீயணைப்பு வாகனத்தின் மூலம் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியான காந்திபுரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். மேலும் தீ விபத்து தொடர்பாக காட்டூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!