நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை.. விரைவில் குணம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 4:00 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவில் காவிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி,‘நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் விஜய், சூர்யா, ஜீவா எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றவர். இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணம் முடிந்த ஒரு சில மாதங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். எனினும் அவர்களின் திருமண வாழ்க்கை இறுதியில் விவாகரத்தில் முடிந்து விட்டது. இருப்பினும் சோர்ந்து விடாது மீண்டும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்தவகையில் தமிழ், தெலுங்கு, கனடா போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கலக்கி வந்த சமந்தா தற்போது பாலிவுட்டிலும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அவரது முதல் அறிமுகமான பாலிவுட் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவரே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மயோசிடிஸ் எனும் தசைகள் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும், பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைவேன் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இறுதியில் ஐலவ்யூ என பதிவிட்டுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?