அடேய்… என்னடா நடக்குது? ஓடும் ரயிலில் திடீர் கோளாறு… பாதியில் நின்ற ரயில் : பயணிகள் அவதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 11:18 am

பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் கவரைப்பேட்டை அருகே என்ஜின் பழுது. மீமு புறநகர் ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் கவரைப்பேட்டை அருகே என்ஜின் பழுது காரணமாக விரைவு ரயில் நின்றது.

பின்னர் இன்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு விரைவு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்கத்தில் ரயில் சேவை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கால தாமதமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டது.

இதனால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர் .

  • sai abhyankkar composing music 8 big productions ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை? ஆனா 8 பெரிய படங்களுக்கு மியூசிக் டைரக்டர்! இது சாய் அப்யங்கர் Era…