குளியலறையில் தற்கொலை முயற்சி : மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி பலி.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2022, 9:13 am
Medical Student Dead - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : அரசு மருத்துவக்கல்லூரி மாணவி குளியலறையில் கழுத்தறுத்து தற்கொலை செய்த நிலையல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக தொழில் செய்து வருகிறார். இவரது மகள் நிவேதா. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று 20-02- 2020 பால்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளியில் சென்றிருந்த நிலையில் நிவேதா மற்றும் அவரது தம்பி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற நிவேதா வெகுநேரமாகியும் குளியலறையிலிருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது தம்பி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிவேதா கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 300

0

0