தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

28 February 2021, 11:50 am
summer started - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் அதை ஒட்டியகடல் பகுதியில் வளிமண்டலத்தில் காற்று சுழற்சி இல்லை. எனவே மார்ச் 3ம் தேதி வரைதமிழகம், புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

chennai metrology - updatenews360

சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் தற்போது பகல்நேர வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 27ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 100டிகிரி, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 99 டிகிரி, வேலூர், திருச்சி, தருமபுரி ஆகியஇடங்களில் தலா 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 10

0

0