‘ரம் பம் பம்’ பாடல் ரீமேக்கில் குஷ்புவை சுந்தர்.சி தவிர்க்க இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த டிடி..!

Author: Vignesh
1 October 2022, 12:00 pm

இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படம் அடுத்த வாரம் அக்டோபர் ஏழாம் தேதி ரிலீஸ் ஆகிறது. தன்னுடைய அவ்னி சினிமாக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகை குஷ்பூ இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் குஷ்பு ஆடியிருந்த ரம்பம்பம் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் தன்னை ஆடா அழைக்கவில்லை என்று குஷ்பூ தனது வருத்தத்தை அந்தப் படத்தின் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, பிரதாப் போத்தன், கிங்ஸ்லி மற்றும் நடிகைகள் மாளவிகா, அம்ரிதா, ரைசா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் காபி வித் காதல். டிரைலர் ஸ்ரீகாந்த், ஜெய் மற்றும் ஜீவா அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர்.

ஒருவர் காதலிக்கும் பெண்ணை இன்னொருவர் நிச்சயம் செய்வது, தன் மனைவியை விடுத்து வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொள்வது என வித்தியாசமான காதல் அம்சங்களுடன் இந்தப் படம் இருக்கக் கூடும் என்று டிரைலர் மூலம் தெரிய வருகிறது. எது எப்படியோ இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் படங்கள் போல இந்த படமும் ஜாலியாக நம்மை கடத்திச் செல்லும் என்று நம்பலாம்.

குறிப்பாக முழுக்க முழுக்க ஊட்டியில் படம் பிடிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் பார்ப்பதற்கு ஒரு நல்ல ஃபீல் குட் மூவியாக இந்தப் படம் இருக்கும் என்று சுந்தர்.சி முன்னதாக கூறியிருக்கிறார். யுவன் இசை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்திற்காக அவர் போட்டுள்ள இசை சில காலம் மட்டும் கேட்கும் வகையில் இல்லாமல் காலத்தை தாண்டி நிற்கக்கூடிய இசையாக இருக்கும் என குஷ்பூ கூறியுள்ளார். மேலும் தான் ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் சுந்தர்.சி தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநர். அவரை வைத்து படம் செய்தால் ஒரு தயாரிப்பாளர் நிம்மதியாக தூங்கலாம். ஏனென்றால் கண்டிப்பாக அவரது படம் லாபம் ஈட்டி தந்துவிடும் என்று குஷ்பு கூறியுள்ளார்.

ரம் பம் பம் ஆரம்பம் ஆனால் இந்தப் படத்தில் தனக்கு இருக்கும் ஒரே வருத்தம் தன்னுடைய பாடலை ரீமிக்ஸ் செய்துவிட்டு அதில் ஆட தன்னை அழைக்கவில்லை என்பதுதான் என்று குஷ்பூ மேடையில் கூற, நீங்கள்தான் கால் ஷீட் தரவில்லை என்று இயக்குநர் கூறியதாக திவ்யதர்ஷினி உண்மையை போட்டுடைக்க, உடனே சுந்தர்.சி மேடையேறி, ஏற்கனவே குஷ்புவை அந்த பாடலில் பார்த்துவிட்டோம்.

புதிதாக எதற்கு என்றுதான் அழைக்கவில்லை. கண்டிப்பாக இந்தப் பாடலில் குஷ்புவை ஆட வைத்து ரீல்ஸ் வெளியிடுகிறேன்” என்று சுந்தர்.சி விளக்கமளித்தார். கமலஹாசனுடன் இணைந்து குஷ்பூ அந்த பாடலில் பிரம்மாதமாக நடனமாடியிருப்பார். இந்த ரீமிக்ஸ் பாடலிலும் குஷ்பு ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

  • vijay sethupathi apologize for the threat coming to delete surya vijay sethupathi videos என்னை மன்னிச்சிடுங்க? சூர்யா சேதுபதி விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!