கணவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய சுந்தரி சீரியல் நடிகை : கோவையில் அரங்கேறிய பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 6:53 pm
Sundari Serial Actress - Updatenews360
Quick Share

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ரமேஷ் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா தனது தாய் பீளமேடு சென்று விட்டார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதால் ரம்யா கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகரருடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது ரம்யா சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் சீரியல் நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

ரமேஷ் இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளையும் தன் தாயையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்,இதை அடுத்து ரம்யா சில தினங்கள் முன்பு ரமேஷ் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் ரம்யா தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம் தன் கணவர் குடித்துவிட்டு கொடுமை படுத்துவதாகவும் அவரை கொலை செய்ய வேண்டுமென சந்திரசேகரனிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரம்யாவும் ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் மோதி தான்தாக்கி கையை உடைத்து மறைத்து வைத்திருந்த ஆக்ஸாபிலைட் மூலம் ரமேஷை கை,கழுத்து. தலை பகுதிகளை தாக்கி விட்டு தப்பித்து விட்டார்.

ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் மொபைல் போனில் வந்த அழைப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டதில் சீரியல் நடிகை தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

ரம்யா மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்து மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

துணை நடிகை கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Views: - 165

0

0