அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்த சூரிய ஒளி.. அதிசய நிகழ்வை காண திரண்ட பக்தர்கள் : மெய்சிலிர்க்க வைத்த காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 12:22 pm

அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்த சூரிய ஒளி.. அதிசய நிகழ்வை காண திரண்ட பக்தர்கள் : மெய்சிலிர்க்க வைத்த காட்சி!

அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது சூரிய பகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வது ஐதீகம்.

இந்த ஆண்டு இன்று சூரிய உதயத்தின் போது, பழமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி செங்கதிராக ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்து, வணங்கியது. அப்போது செந்நிறமாக அவிநாசிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 6.45 மணிக்கு தொடங்கி, 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து, படிப்படியாக மறைய ஆரம்பித்தது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!