சூப்பர் ஸ்டார் ரஜினியின் அக்கா விஜய்க்கு அம்மா : தளபதி 66 படத்தில் இணைந்த பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 12:38 pm
Vijay 66 - Updatenews360
Quick Share

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படம் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க குடும்பப் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

Rashmika Mandanna 'feels like something else' after meeting Thalapathy  Vijay; shares pics | Celebrities News – India TV

தளபதி 66 என்று தற்காலிகமாக அழைத்து வரும் இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ராஷ்மிகா இணைந்தார். பின்னர் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு என படத்தை பற்றி தினமும் அப்டேட் ரிலீஸ் செய்து வருகிறது படக்குழு.

sarath kumar: Sarath Kumar joins the cast of Thalapathy 66 | Tamil Movie  News - Times of India

முதன்முறையாக விஜய் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்தன.

Thaman reveals his plans for 'Thalapathy 66' | Tamil Movie News - Times of  India

இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக பிரபல நடிகை ஜெயசுதா நடிக்கப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை ஜெயசுதா வம்சி இயக்கத்தில் தோழா படத்தில் கார்த்திக் அம்மாவாக நடித்திருந்தார்.

பாண்டியன் படத்தில் ரஜினியின் அக்கவாக போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார். மேலும் செக்க சிவந்த வானம் படத்தில் பிரகாஷ் ராஜ்ஜின் மனைவியாக நடித்திருப்பார்.

Inspector Jayasudha see Pandiyan(Rajini) working with Tiger Prabhakar |  Cinema Junction HD - YouTube

தற்போது இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் அக்கா, விஜய்க்கு அம்மாவாக நடித்து வருவதாக பெருமிதத்துடன் ட்வீட் செய்து வருகின்றனர்.

Views: - 780

12

4