சசிகலா முதலமைச்சராக மண் சோறு சாப்பிட்ட ஆதரவாளர்கள் : தேவர் படத்திற்கு பூஜை செய்து நூதன வழிபாடு!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2021, 6:03 pm
மயிலாடுதுறை : சசிகலா முதலமைச்சராக வேண்டி முத்துராமலிங்க படத்திற்கு அஞ்சலி செலுத்தி மண்சோறு சாப்பிட்ட முக்குலத்தோர் பாசறை நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முத்துராமலிங்கத் தேவரின் 59வது குருபூஜை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிற்றரசு தேவர் தலைமையிலான அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில் மயிலாடுதுறை நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகமான அன்பகத்தில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர்.
இதனையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமதி வி கே சசிகலா முதலமைச்சராக பதவியேற்க வேண்டி அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி செயலாளர் கில்லி பிரகாஷ் மயிலாடுதுறை நகர செயலாளர் முத்து முரளி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் இளைஞர்கள், தேவர் திருமகனார் திருவுருவப்படம் முன்பு மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது வருங்கால முதலமைச்சர் சின்னம்மா வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
சசிகலா அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்றும், அதிமுகவை காக்க வேண்டும், மீண்டு வர வேண்டும் என கூறிக்கொண்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0