தைப்பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை : முதலமைச்சர் பழனிசாமி டிவிட்டரில் கூறிய தகவல்!!

27 November 2020, 12:41 pm
CM Twitter - Updatenews360
Quick Share

தைப்பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை என அறிவிப்பு வெளியிட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்திற்கு வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழர் பண்டிகையான பொங்கலுக்கும் இயங்கும். இந்நிலையில், வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நீதிமன்றம் மதியம் ஒரு மணிக்கே மூடப்படும். பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

குறிப்பாக ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. எனவே தமிழர் திருநாளுக்கும் விடுமுறை விட வேண்டுமென பல நாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை வரும் 2021ம் ஆண்டு தான் நடமுறைக்கு வர உள்ளது. பொங்கல் பண்டிகை அன்று உச்சநீதிமன்றம் விடுமுறை அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Views: - 0

0

0