மோசமான காரணத்த சொல்லாதீங்க.. 4 மாசத்துல நகர்ப்புற தேர்தல் நடத்தியே ஆகணும் : உச்சநீதிமன்றம் கறார்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 11:52 am
SC Order - Updatenews360
Quick Share

தமிழகத்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 கால மாதம் அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இரண்டு கட்டமாக வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகிறது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 7 மாதம் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள் மோசமானதாக உள்ளது. 4 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

Views: - 108

0

0