மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சுப்ரியா நியமனம் : தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 10:34 am
Supriya -Updatenews360
Quick Share

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியாவிற்கு கூடுதல் பொறுப்பு : மாசுக்கட்டுப்பாட்டு டுப்பாட்டு வாரிய தலைவரானார் சுப்

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி அவரது வீட்டில் பணம், தங்கம் மற்றும் சந்தன பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வெங்கடாசலம் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது சுப்ரியா சாஹு தமிழக சுற்றுசூழல் துறை செயலாளராக இருந்து வரும் நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 107

0

0