மீண்டும் சர்ச்சை கதை.? ஜெய்பீம் இயக்குனருடன் கைகோர்த்த சூர்யா.? வெளியான தகவல்.!

Author: Rajesh
22 May 2022, 6:52 pm
Quick Share

ஓடிடியில் நேரடியாக களம் இறங்கி திரைப்படம் இந்த அளவுக்கு வரவேற்பையும், விமர்சனங்களையும் பெறுமா என்ற ஆச்சரியத்தை ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியது. இந்த படத்தின் தாக்கம் 200 நாட்களை கடந்து இன்றும் தொடரும் நிலையில், இதன் இயக்குனர் ஞானவேல், சூர்யாவுக்காக மீண்டும் ஸ்க்ரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.

இதற்கு சூர்யாவும் ஓகே சொன்ன நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது பாலா இயக்கி வரும் தனது 41வது படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். வாடிவாசல் படத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ப்ரீ புரொடக்சன் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறவுள்ளது. இங்கு படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதன்பின்னர் வாடிவாசல் ஷூட்டிங்கை முடிக்கும் சூர்யா அடுத்ததாக ஞானவேலுடன் இணைகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஜெய்பீம் திரைப்படம் இன்று வரை சர்ச்சையாக எழுந்து வரும் நிலையில் மீண்டும் அதே இயக்குனருடன் சூர்யா சேர இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Views: - 636

0

0