என்கவுன்டரில் சந்தேகம்… திமுகவினரை காப்பாற்ற காவல்துறை சதியா? அண்ணாமலை கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2024, 2:25 pm
annamalai---udpatenews360
Quick Share

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கு அண்ணாமலை சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

  • Hema கேரள சினிமாத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!
  • Views: - 208

    0

    0