மான ரோஷம் நல்ல காமெடி…! ஓய்வூதியம் அரசு தருகிறது..! எஸ்.வி. சேகர் பதிலடி
6 August 2020, 10:05 amசென்னை: எனக்கு ஓய்வூதியம் தருவது அதிமுக அல்ல, தமிழக அரசாங்கம் என்று எஸ்.வி. சேகர் பதிலடி தந்துள்ளார்.
அண்மையில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோவை வெளியிட, அது அரசியலில் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. அதாவது அதிமுக கட்சி கொடியில் இருந்த அண்ணாவின் பெயரை நீக்கி விடுங்கள் என்பது தான் அது.
இது குறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், எஸ்.வி சேகரை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அண்ணா திமுக கொடியை காட்டி தான் அவர் ஓட்டு வாங்கி 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தார்.
ஆகையால் மானம், ரோஷம் இருந்தால் 5 ஆண்டு சம்பளம், இப்போது அவர் பெற்றுக் கொண்டு இருக்கும் பென்ஷன் எல்லாவற்றையும் திருப்பி தரவேண்டும் என்று அதிரடியாக கூறினார்.
இதற்கு எஸ்.வி. சேகர் பதிலடி தந்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது: நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்தஇல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா என்று கேட்டுள்ளார்.
மற்றொரு பதிவையும் அவர் வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: என் MLA சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள்Exclamation question mark. யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும். “மான ரோஷம்” நல்ல காமெடி என்று கூறி உள்ளார்.