5 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Author: Udhayakumar Raman
5 September 2021, 1:26 pm
Quick Share

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாதல் தமிழகத்தில் அடுத்து ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், தமிழகத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 5 செ.மீ மழையும், காவேரிப்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதேபோல், மேற்குத் தொடர்ச்சி, தென், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 143

0

0