பொள்ளாச்சி தீர்ப்பு ஓகே… அப்படியே பல்கலை., பாலியல் விவகாரத்திலும் நடவடிக்கை எடுங்க : அண்ணாமலை அதிரடி!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2025, 4:43 pm
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்க: தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!
தனது X தளப்பதிவில், தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.

இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
