பழைய கதையை பேசாமல் மீனவர்கள் நலனில் அக்கறை காடுங்க.. துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2025, 1:21 pm

திருப்பூரில் நடைபெறும் ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் துரை வைகோ விமான மூலம் கோவை வந்தடைந்தார்.

இதையும் படியுங்க: மாமியார் வீட்டுக்குள் நுழைந்த மருமகள்… 4 நாட்களில் உயிர் பலி : கொடூர சம்பவம்!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது :-தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், 2009 ல் இலங்கை போர் முடிந்ததை தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது என்பது தொடர்ந்த வருவதாகவும் பலரும் இறந்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், இதனால் மீனவர்கள் அவர்களது குழந்தைகளை இந்த மீனவத் தொழிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை இந்த மீனவத் தொழிலே செய்ய முடியாது. என்கின்ற நிலைமை தற்பொழுது ஏற்பட்டு இருப்பதாகவும் இதற்கான நிரந்தர தீர்வை ஒன்றிய அரசுதான் கொண்டு வர முடியும் என தெரிவித்தார்.

மீனவர்களுக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு என்பது கிடைக்கவில்லை எனவும் மீனவ குடும்பங்கள் செத்துப் பிழைத்து வருவதாகவும் தெரிவித்த அவர் வாரம் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது கொடுமையாக தாக்குவது நிகழ்ந்து வருவதாகவும் இதற்குரிய நிரந்தர தீர்வை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் அது எந்த அரசாக இருந்தாலும் சரி என தெரிவித்த அவர் கடந்த காலங்களில் நடந்த தவறு என குறிப்பிடுவதை விட்டுவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!