ஒழுங்கு நடவடிக்கை எடுத்தா மட்டும் பத்தாது… காவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க : டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2022, 6:34 pm

லஞ்சம் வாங்கும் போலீசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையூட்டு (லஞ்சம்) பெறும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரதாஸின் ஓதிய உயர்வு பலன்களை நிறுத்தி வைத்தது எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறை செயலர், தமிழ்நாடு டிஜிபி ஆகியோர் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!