கணவனின் சடலம் முன்பு.. கள்ளக்காதலனுடன் உல்லாசம் : காரில் ஊர் சுற்றிய மனைவி!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2025, 4:29 pm

கண்ணை மறைத்த கள்ளக்காதலால் கணவனை கொன்று மனைவி செய்த அட்டூழிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் கதிரம்மா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா என்பவருடன் 20 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்தது

இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, ஒரே வீட்டுக்குள் பேசாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த சமயத்தில் அருகில் வசித்து வந்த வேணு என்பவருடன் கதிரம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது மெல்ல மெல்ல கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

இதை அறிந்த ரமணா, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத கதிரம்மா, வேணுவடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

ஒரு நாள் இரவு வீட்டுக்கு வந்த ரமணா, சாப்பிட எதுவும் செய்யாமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியிடம் சண்டை போட்டார். செல்போனை வாங்கி பார்த்த போது, வேணுவிடம் பேசியது தெரியவந்தது. இதனால் கதிரம்மாவை அடித்துள்ளார்.

இதை கதிரம்மா தனது கள்ளக்காதலன் வேணுவிடம் கூற, கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார். அதன் படி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரமணா அயர்ந்து தூங்கினார்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த வேணு, கதிரம்மா இருவரும் கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக வேணுவின் காருக்குள் கணவரின் சடலத்தை ஏற்றினார்.

சடலத்தை வீசி எரித்துவிடலாம் என திட்டம் போட்டு ஊர் ஊராக சுற்றினர். ஆனால் சரியான இடம் கிடைக்காததால் 2 நாட்களாக காரில் ஊர் ஊராக சுற்றியே வந்தனர். இடம் கிடைக்காததால் நடுக்காட்டுக்குள் காரை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டுக்கு திரும்பி எப்போதும் போல தங்களது வேலைகளை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் காட்டுப்பகுதிக்குள் ரோந்து சென்ற போலீசார், கார் தனியாக நிற்பதை கவனித்து, உடனே காரை திறந்து பார்த்துள்ளனர். உள்ளே இருந்து ரமணா உடலை கைப்பற்றி விசாரிக்க துவங்கினர்.

காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, வேணு சிக்கினார். விசாரணையில் கதிரம்மாவுடனான கள்ளக்காதலுக்காக ரமணாவை கொன்றது அம்பலமானது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!