6 மாதத்திற்குள் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2021, 12:23 pm
6 மாதத்திற்குள் சென்னையிலுள்ள தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு, மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.
மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக, பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்து கிடைப்பதால், அதன் முக்கியத்துவதை உணர்ந்து, 1961-ல் கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தபட்டது.
பல்வேறு காலகட்டங்களில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில், 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. இந்நிலையில்,மைசூர் கல்வெட்டியல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
அப்போது ஆயிரத்திற்கும் அதிகமான, கல்வெட்டு ஆவணங்கள் தொடர்பான சிதைந்திருந்ததால், நாம் ஆவணங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ்மொழி தொடர்பான கல்வெட்டுக்களை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும், கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்பு சட்டப்படி நவீன முறையில் பாதுகாக்கப்பட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு இதுகுறித்து கூறுகையில், சென்னையில் உள்ள தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் துறை என பெயர்மாற்றம் செய்யவும், 6 மாதத்திற்குள் சென்னையிலுள்ள தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு, மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து தர வேண்டும் என்றும் உதவிட்டுள்ளனர்.
0
0