நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை!!

28 January 2021, 10:26 am
TN Minister - Updatenews360
Quick Share

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்க உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் நடைபெறும் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் முக்கிய வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக நாளை அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் இதுவரை தமிழக அரசு துறை வாரியாக செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தபட்டுள்னவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

மேலும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிப்.2ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்வது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0