விஜய்க்கு இது கூட தெரியாதா?.. புரியாத புதிராவே இருக்கே; தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் அறிக்கை..!

Author: Vignesh
23 August 2024, 2:07 pm

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:- நடிகர் விஜய் பல மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து இப்போது தான் கட்சி கொடியையே அறிமுகப்படுத்தி உள்ளார்.இனி கட்சி கொள்கையை சில மாதங்கள் கழித்து அறிவிப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.

இது ஒரு அரசியல் கட்சிக்கு உகந்த செயல் இல்லை. ஏன் என்றால் அரசியல் என்பது ஆயிரம் வால்ட் பல்பு போன்று வேகத்துடன் செயல் படும் களம் என்பது நடிகர் விஜய்க்கு தெரியவில்லையா? அல்லது அவரிடம் இருக்கும் யாருக்கும் தெரியவில்லையா? என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு அரசியல் கட்சி முழு வேகத்துடன் செயல் பட வேண்டும் என்றால் அதற்கு முதலில் கட்டமைப்பு தேவை என்பது கூட தெரியாமல் அரசியலில் குதித்து விட்டு ஆமை வேகத்தில் செயல்படுவதினால் தமிழக அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது என்பது நடிகர் விஜய்க்கு தெரியவில்லை போலும்.

அரசியலில் இறங்கினால் முழு நேரமும் மக்கள் பணி மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் பற்றி தினந்தோறும் பேசி ஆக்கபூர்வமான முறையில் செயல்பட வேண்டுமே தவிர தான் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்றும் தனது படம் நன்றாக ஓட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

எனவே நடிகர் விஜயை கேட்டு கொள்வது என்னவென்றால் அரசியலில் குதித்து விட்டால் முக்காடு (திரைப்படம்)போட்டு விட்டு வெளியே அலைய கூடாது முழு நேரமும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போன்று செயல் பட கூடாது. மேலும் நடிகர் விஜய் முதலில் நடிப்பு பின்பு அரசியல் என்று இரட்டை வேடம் போட்டு செயல் படுவதும் வேடிக்கையாக உள்ளது. இப்படியே தொடர்ந்து பயணித்தால் தமிழ் நாட்டு அரசியலில் நடிகர் விஜய் எந்த விதத்திலும் பிரகாசிக்க முடியாது என்பதையும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!