இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் மாயம் : மீனவர்களை மீட்க கோரி போராட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 October 2021, 2:16 pm
புதுக்கோட்டை : கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வரை வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு மேலும் மத்திய மாநில அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டைபட்டினத்தில் இருந்து நேற்று 118 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் 18 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதில் சென்ற சுகந்தன், சேவிய,ர் ராஜ்கிரண் ஆகியோர் சென்ற படகின் மீது இலங்கை கடற்படை மோதியதில் மூன்று பேரும் நீரில் தத்தளித்த அப்போது சேவியர் சுகுந்தன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மாயமான ராஜ்கிரண் தேடி வரும் நிலையில் இவர்கள் மூவரையும் மீட்டுத்தர வேண்டும் விசைப்படகுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்களை தமிழகத்துக்கு கொண்டு வரும் வரை விசைப்படகு மீனவர்கள் காலவரையறையற்ற வரை வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவுடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற மறியல் கைவிடப்பட்டது. மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0
0