இலங்கை கடற்படையால் உயிரிழந்த தமிழக மீனவர்கள் : குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி ஆறுதல்!!

23 January 2021, 5:52 pm
Kanimozhi - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை : இலங்கை கடற்படையால் உயரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்தினரை திமுக எம்பி கனிமோழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் செந்தில்குமார், நாகராஜ், மெசியா, சாம்சன் ஆகிய நான்கு பேரின் குடும்பத்தினரை எம்.பி கனிமொழி இன்று அவர்களின் குடும்பத்தினரை ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கி உள்ளார். எம்பி கனிமொழியிடம் இறந்த மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதவாறு சில கோரிக்கைகளை வைத்தனர்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் கடலுக்கு மீன் தானே பிடிக்கச் சொல்கிறார்கள் வேறு ஏதும் தவறு செய்ய செல்லவில்லையே. மீன்பிடிக்கச் சென்று அவர்களை இவ்வாறு கொடூரமான முறையில் தாக்குகின்றனர். இதை கண்டிக்க வேண்டும் என்றும் உடனடியாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா கொண்டு வரப்படும் 4 மீனவர்களின் உடலையும் இந்திய அரசு மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Views: - 0

0

0