இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும் : ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த தாக்குதலுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 6:06 pm

இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும் : ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த தாக்குதலுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று ஏற்பட்ட பிரச்சினையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பக்தர் பலத்த காயமடைந்துள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள், மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கின்றது.

கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க தான் அறநிலையத்துறை; அவர்களை காயப்படுத்துவதற்கு அல்ல. அறம் இல்லா அறநிலையத்துறை அதிகாரிகள். இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை, சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைப்பது என இந்து மதத்திற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்க தொடங்கியுள்ளது. இந்து சமயத்தின் நம்பிக்கையை காக்க இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும். ஐயப்ப பக்தர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!