“இந்தியாவிற்கே தமிழகம் தான் முன்னோடி“ : கோவை பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு!!

23 January 2021, 12:39 pm
Cbe Rahul Gandhi- Updatenews360
Quick Share

கோவை : இந்தியாவிற்கே தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக உள்ளது, ஆனால் இங்குள்ள செல்வங்களை விற்க முயற்சிகள் நடைபெறுவதாக கோவை வந்த ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகில்காந்திக்கு கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவினாசி சாலை சித்ரா அருகே ராகுல்காந்தி பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், தமிழக மக்களை 2 ம் தர குடிமக்களாக மோடி கருதுகின்றார்.தமிழகம் தான் எல்லாத்துக்கும் முன்னோடி, இங்கு இருக்கும் செல்வங்களை விற்றுக்கொண்டுள்ளார் மோடி. தமிழகம் எல்லாதையும் இழந்துகொண்டு உள்ளது.

தமிழக விவசாயிகள் சிரம்மப்பட்டு கொண்டுள்ளனர். மாணவர்கள் விவசாயிகள், தொழில்துறையினரை சந்தித்து பேச உள்ளேன், காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று சொல்லப் போறேன். தேர்தலுக்காக நான் வரவில்லை. தமிழ் மக்கள் மீது பாசத்தில் வந்துள்ளேன். அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வந்துள்ளேன். இந்த பந்தயம் தொடரும் என கூறினார்.

முன்னதாக விமானநிலையத்தில், காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் அழகிரி, தங்கபாலு, ஈவிகேஸ். இளங்கோவன், மயூரா ஜெயக்குமார், திருநாவுக்கரசர், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.

Views: - 3

0

0