தமிழகத்திற்கு பாஜக தேவைப்படுகிறது.. பொறுத்தது போதும், கடுமையாக உழையுங்கள் : திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!!

14 July 2021, 2:42 pm
Annamalai Speech - Updatenews360
Quick Share

திருப்பூர் : அடுத்த 3 வருடங்கள் கடுமையாக பணி செய்ய தயாராக இருக்க வேண்டும், இனியும் பொறுத்திருக்க முடியாது, நாம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனதை அடுத்து , புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர் வரும் 16 ஆம் தேதி சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்று கொள்கிறார்.

அதற்காக இன்று காலை கோவையில் தொடங்கி இரு நாட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பா.ஜ.க நிர்வாகிகள் கொடுக்கும் வரவேற்பை பெற்றுக் கொள்கிறார். அந்த வகையில் இன்று , திருப்பூருக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்பை கொடுத்தனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின் , கட்சி தொண்டர்களிடையே அண்ணாமலை பேசினார்.

அப்போது , தமிழகத்தில் உண்மையான சிந்தாந்தத்தை கொண்ட கட்சி பா.ஜ.க. வேறு எந்த கட்சியும் கொள்கை ரீதியாக நம் அருகாமையில் வர முடியாது. உண்மையான நாட்டுபற்று நம் கட்சியில் தான் உள்ளது என்றார். முன்னர் பா.ஜ.க விற்கு தமிழ்நாடு தேவைப்பட்டது. தற்போது , தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க தேவைப்படுவதாகவும் கூறினார்.

நீட் வேண்டாம் , புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்றும் , எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என்றும் திமுக சொல்கிறது. ஆட்சியை சரியாக நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை என திமுக ஆட்சி மீது குற்றம்சாட்டினார்.

தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் திமுக கட்சி துண்டை போட்டுக்கொண்டு தடுப்பூசி டோக்கனை பெற்றுக்கொள்கிறார்கள். சாதாரண மக்களுக்கு தடுப்பூசி வருகிறாதா என்றால் இல்லை… திமுக குடும்பத்திற்கு தடுப்பூசி செல்கிறது. அதை மறைப்பதற்காக மோடி தடுப்பூசி கொடுக்கவில்லை என கூறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இறுதியாக , அடுத்த 3 வருடங்கள் கடுமையாக பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் . இனியும் பொறுத்திருக்க முடியாது. நாம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என பேசி முடித்தார்.

முன்னதாக அண்ணாமலைக்கு அறிமுகம் கொடுக்கும் போது திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல், அமித்ஷா பெரிய சங்கி என்றும் அவர் வழி வந்த அண்ணாமலை சின்ன சங்கி என்றும் கூறினார்.

Views: - 258

0

0