அதிகளவு கொரோனா நோயாளிகள் பூரண குணமடைவதில் தமிழகம் இரண்டாம் இடம்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.!!

7 August 2020, 10:48 am
Radhakirhsnan - Updatenews360
Quick Share

விழுப்புரம் : இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து தமிழகத்தில் தான் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதார துறைசெயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் கொரோனா தொற்று சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்பொழுது சிகிச்சை மையங்கள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்த அவர் கிராம புறங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைக்க அதிகளவு கவனம் செலுத்தப்படுவதாகவும் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பினை குறைக்க 12 விதமான சிகிச்சை முறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக தகவல் அளிப்பது போல தொற்று இல்லை என தெரிய வருபவர்களுக்கும் உடனடியாக தகவல் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தொலைபேசி மூலமாக மருத்துவ சேவை அதிகளவில் வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு 2000 மருத்துவ சிகிச்சை ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

கொரோனா தனிமைபடுத்தப்பட்ட முகாம்கள் ஒரு சில இடங்களில் சுகாதரமற்ற முறை இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருவதால் அதனை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படுள்ளதாகவும் சில முகாம்கள் சிறப்பாக செயல்படுவதாக பொதுமக்களே கூறும் நிலையும் இருக்கிறது எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்படுவதாகவும் இறப்பு குறித்து எதுவும் மறைக்கவில்லை எனவும் கொரோனா நோயாளிகள் இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிகளவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாக கூறினார்.

Views: - 11

0

0