தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் : பொது மக்கள் மகிழ்ச்சி..!

1 September 2020, 8:43 am
Quick Share

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 161 நாட்களுக்கு பின் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. அன்லாக் 3.0 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அன்லாக் 4.0 அமலுக்கு வந்துள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே வழங்கியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து நேற்று முன்தினம் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், தமிழகம் முழுவதும் இ.பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாவும், மாநிலத்திற்கு உள்ளே பொது போக்கு வரத்திற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 161 நாட்களுக்கு பின் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. சென்னையில், மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர். கொரோனா ஊராடங்கால் பிற மாவட்டங்களிலும் தொடங்கி நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.

Views: - 0

0

0