தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..!

5 September 2020, 2:02 pm
Quick Share

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வேலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருவண்ணாமலை திருப்பூர் தஞ்சாவூர் திருவாரூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை நாகப்பட்டினம் கடலூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

பிற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழைக்கான எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்தில் தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் கோயம்புத்தூர் நீலகிரி நாமக்கல் சேலம் கரூர் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Views: - 0

0

0