இன்னும் இரண்டு மாதத்தில் பழைய நிலைக்கு திரும்பும் தமிழகம் : “ஒரு ஹேப்பி நியூஸ்“!
21 September 2020, 1:02 pmசென்னை : தமிழகத்தில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதாரம் இன்னும் இரண்டு மாதத்தில் கிடைத்து விடும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா முடக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரமே ஸ்தம்பித்தது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் வர்த்தகத்தில பயங்கர அடி விழுந்தது. இதே போலதமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்க பொருளாதாரத்தை மேம்படுத்த பொருளதார வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு பல முறை ஆலோசனைகளை மேற்கொண்டது. ஏற்கனவே அறிவித்தபடி தமிழக பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான நிலைமை குறித்து தங்களது அறிக்கை இன்று முதலமைச்சரிடம் தலைமை செயலகத்தில் சி.ரங்கராஜன் தாக்கல் செய்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவுக்கு முந்தைய நிலையை இன்னும் 2 மாதங்களில் தமிழகம் எட்டும் என்றும், பொருளாதார வளர்ச்சி 1.71 சதவீதமாக வரும் 2020-21 ஆண்டில் எட்டும் என்றும் அதே சமயம் சரிவும் ஏற்படலாம் என்பதை கணித்துள்ளதாக தெரிவித்தார்.
செலவு அதிகரிப்பால் தமிழக அரசின் கடன் சுமை அதிகரிக்கும் என்றும், வருவாய் பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறைக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். அதே போல கட்டுமானத்துறை வசம் உள்ள 3 ஆயிரத்து 200 கோடி ரூபாடிய செலவிடவும், நகர்புறத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பரிந்துரைத்துரைத்துள்ளதாகவும், வரியை உயர்த்த பரிந்துரை செய்யவில்லை என கூறினார்.