தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு அதிரடி

14 May 2021, 3:39 pm
tn police - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு அமைந்தவுடன் இரு டிஜிபிக்கள் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், மேலும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக ஆபாஷ் குமாரும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் எஸ்பியாக சுரேஷ்குமாரும் நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும், தமிழக காவல்துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பொறுபபு வழங்கப்பட்டுள்ளது.

Views: - 181

0

0