தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறதா..? தமிழக தேர்தல் அதிகாரி அளித்த பதில்

17 March 2021, 4:59 pm
Satyabrata Sahoo - updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பதிலளித்துள்ளார்.

தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடியும் மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது :- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. பீகாரில் தேர்தல் நடந்த போது சராசரியாக 12 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகி வந்தன. ஆனால், தமிழகத்தில் தற்போது நிலைமை அப்படியில்லை, எனக் கூறினார்.

Views: - 10

0

1