ஆளுநர் உரையுடன் கூடுகிறது தமிழக சட்டசபை..! ஜன. முதல் வாரத்தில் நடத்த ஏற்பாடு..!

15 December 2019, 11:48 pm
tamil nadu secretariat -updatenews360
Quick Share

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, தமிழக சட்டசபை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையானது கடந்த ஜூலை மாதம் 20ம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு அடுத்த மாதத்துக்குள் அவையை கூட்ட வேண்டும் என்பது மரபாகும்.

அதன்படி கணக்கிட்டால் ஜனவரி 19ம் தேதிக்குள் கூட்ட வேண்டும். எனவே பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சட்டசபை கூடும். அதாவது முதல் வாரத்தில் கூட வாய்ப்புள்ளது.

 ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ல்  முடிகிறது. அதனை தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு 6ம் தேதிக்குள் நடைபெறும். 12ம் தேதிக்குள் கூட்டத் தொடர் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.