வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது கடந்த காலம்.. வடக்கிற்கும் வாரி வழங்குவதுதான் இன்றைய நிலை ; முதலமைச்சர் பெருமிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 2:42 pm

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது கடந்த காலம்.. வடக்கிற்கும் வாரி வழங்குவதுதான் இன்றைய நிலை ; முதலமைச்சர் பெருமிதம்!

அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ரவி முழுவதுமாக படிக்காமல் புறக்கணித்து விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசினார்.

அப்போது அவர், “பெரியார், அண்ணாவின் வாரிசாக எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்படுகிறேன்; கலைஞர் இருந்திருந்தால், திராவிட மாடல் ஆட்சியை கண்டு மகிழ்ந்திருப்பார்.

பாசிசத்தை, எதேச்சதிகாரத்தை கண்டு பயந்து விடாமல் தொடர்ந்து முன்னேறுவோம் ஆட்சிப் பொறுப்பேற்ற 33 மாதங்கள், முன்னேற்றமான சாதனை மாதங்களாகும். திராவிட மாடல் வழியில் இயங்குவதால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது கடந்த கால நிகழ்வாகி விட்டது; வடக்கிற்கும் நிதியை வாரி வழங்குகிறது. அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது ஆளுநரின் கடமை.

ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!