தமிழகத்தில் இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று : மாவட்ட வாரியான பாதிப்பு விபரம்…

4 May 2021, 7:03 pm
corona - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,000-ஐ தாண்டியது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 21,228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,49,292 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் இன்று 6,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 1,618 பேருக்கும், கோவையில் 1,509 பேருக்கும், திருவள்ளூரில் 1,152 பேருக்கும், மதுரையில் 787 பேருக்கும், ராணிப்பேட்டை 747 607 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,618 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 19,112 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 09 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 1,25,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 92

0

0

Leave a Reply